பாலியல் ரீதியான நெறிப்படுத்துகை (Sexual grooming)

பாலியல் வன்முறைகள் பன்முகப்பட்டவை. ஒரு சமூகத்தில் ஒடுக்கபட்ட குழுவினைச் சேர்ந்தவர்களே பெரும்பாலும் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். தமிழ்ச் சமூகத்தில் மட்டுமன்றி, ஏனைய சமூகங்களிலும் இவ்வாறான வன்முறைகளுக்கு ஆட்படுபவர்கள் பெண்களாகவே காணப்படுகின்றனர். 

எனினும், ஒடுக்கப்பட்டோருக்கு எதிராக, குறிப்பாக பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அனைத்து பாலியல் வன்முறைகளும் சமூக, சட்ட நிறுவனங்களால் பாலியல் குற்றங்களாகக் கருதப்படுவதில்லை. எமது ஆண்மைய தந்தைவழிச் சமூகம் பாலியல் குற்றம் எனக் கருதுவதும் அடையாளப்படுத்துவதும் பாலியல் வன்தாக்குதலையே (rape) ஆகும். ஆனால், சட்ட வரையறைகளுக்குள் உள்ளடங்காத அல்லது அந்த வரையறைகளைத் தாண்டிய பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் எமது சமூகங்களில் தொடர்ந்தும் நிகழ்த்தப்படுகின்றன. இக்குற்றங்களுள் முக்கியமானதும் குற்றவாளிகள் மிக எளிமையாக தொடர் குற்றங்களைச் செய்து தப்பக்கூடியதுமாயிருப்பதும் “பாலியல் ரீதியான நெறிப்படுத்துகை (sexual grooming)” குற்றம் மூலமாகவே ஆகும். 

Sexual grooming என்பது பாலியல் ரீதியாக ஒருவரைத் திட்டமிட்டு, நெறிப்படுத்தி, தனது தனிப்பட்ட பாலியல் இச்சைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளும் நடத்தை ஆகும். Sexual grooming இற்கு உள்ளாகுவோர் சிறுவர்கள் அல்லது வயது குறைந்தோர் என்னும் கருத்தும் பிழையான கற்பித்தல்களும் சமூகத்தில் நிலவுகின்றது. உளமுதிர்வு மற்றும் அனுபவக்குறைவினால் வயது குறைந்தோர் அல்லது சிறுவர்களே இந்த வலையில் பெரும்பாலும் சிக்கவைக்கப்படுகிறார்கள். எனினும், வயது முதிர்ந்த அனுபவம் கூடியவர்களும் குற்றவாளியால் உளரீதியாக திட்டமிட்டு மூளைச்சலவை செய்யப்பட்டு பாலியல் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறார்கள்.  

Sexual grooming நடத்தை,மற்றும் அதனுடன் தொடர்புடைய பாலியல் குற்றங்களுக்கான சிறந்த உதாரணமாக ஹார்வி வீன்ஸ்ரைன் (Harvey Weinstein) இன் வழக்கை எடுத்துக் கொள்ளலாம்.  இந்த வழக்கில் பாலியல் குற்றவாளி வீன்ஸ்ரைனுக்கு எதிராக குற்றம் சாட்டிய ஆறு பெண்களை விசாரித்தபோது, வீன்ஸ்ரைன் ஒரே விதமான கோலத்தில் ஒரே விதமான நெறிப்படுத்தலின் ஊடாகவே அப்பெண்களை நெறிப்படுத்தி, மூளைச்சலவை செய்து, தனது பாலியல் இச்சைகளுக்குப் பயன்படுத்தியுள்ளார் என்பது நீதிமன்ற விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இப்பெண்கள் வயது வந்தவர்கள் (adults) என்பதும் இங்கு குறிப்படத்தக்கது. 

மேலும், வீன்ஸ்ரைன் அப்பெண்களை உணர்வு ரீதியான ஒரு பிடிக்குள் வைத்திருந்து, தான் செய்வது சரி என்னும் மாயத்தோற்றத்தை உருவாக்கி, நம்ப வைத்தே இக்குற்றங்களைப் புரிந்துள்ளார் என்பதும் இந்த வழக்கை விசாரித்த உளவியல் நிபுணர்களால் கண்டுபிடிக்கப்பட்டு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பாலியல் குற்றவாளி ஹார்வி வீன்ஸ்ரைனுக்கும் முரளிதரன் மயூரனுக்கும் வித்தியாசங்கள் இல்லை. இதே நெறிப்படுத்தல் பொறிமுறைகளினூடாகவே மு. மயூரனும் பெண்களை தனது பாலியல் தேவைகளுக்குப் பயன்படுத்தி வருகின்றார். இப் பாலியல் நெறிப்படுத்தல் பொறிமுறைகள் எப்படி, எவ்வாறு நடைபெறும், அதற்கான வழிமுறைகள் என்ன என்பதை கீழ்வரும் பத்திகள் விபரிக்கும்.

ஆய்வுகளின் அடிப்படையில், sexual grooming குற்றத்தினை செய்யும் ஆண் நுண்ணியதாகத் திட்டமிடப்பட்ட பொறிமுறைகளுடனும் ஒரே மாதிரியான காய்நகர்த்தல்களுடனுமே இக்குற்றங்களைப் புரிகிறார், தனது victimsஐ தெளிவாகத் தெரிவு செய்கிறார். 

இக்குற்றத்தின் victims ஆக உளரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பாக சிறுவயதில் குடும்ப மற்றும் பாலியல் வன்முறைகள், வதைகளுக்கு (abuse) உள்ளாக்கப்பட்டவர்கள், குடும்பத்தை விட்டு தனியாக வசிப்பவர்கள், தனிப்பட்ட மற்றும் வெளிக்காரணங்களால் மன உளைச்சலுக்கு உள்ளாகியவர்கள் போன்றவர்களையே மு. மயூரன் போன்ற குற்றவாளிகள் தெரிவு செய்கிறார்கள். இந்த victims க்கு உளரீதியான அரவணைப்பை வழங்கும் ஒரு தோற்றப்பாட்டினை ஏற்படுத்தி, நெறிப்படுத்துவதன் ஊடாக தமது பாலியல் தேவைகளை பாலியல் நெறிப்படுத்தி மு. மயூரன் போன்ற குற்றவாளிகள் நிறைவேற்றிக் கொள்கிறார்கள். 

இப்பொறிமுறையின் ஒரு முக்கிய கூறாக victimsஐ மூளைச்சலவை செய்து, அவர்கள் செய்வது சரியானது, அதாவது அது ஒரு non-offensive behavior (சரியான நடத்தை) என்னும் மனநிலைக்கு இட்டுச்செல்வார்கள். இதற்கு ஆதாரமாக புத்தகங்கள், கொள்கைகள், மெய்யியல் போன்ற பலவிதமான கருத்தியல் ஆயுதங்களையும் கையிலெடுத்து திரிபுபடுத்தி இருப்பார்கள். அத்துடன், victimsஐ தாம் அன்பு செய்வதாகவும் அவர்கள் மீது அக்கறை உள்ளதாகவும் காட்டிக்கொள்வார்கள். இதற்குச் சான்றாக இருபக்க நம்பிக்கையை வளர்ப்பதற்காக தமது இரகசியங்களையும் இக்குற்றவாளிகள் தமது victims உடன் பகிர்ந்து கொள்வார்கள். இந்த trust bonding இனூடாக victims உம் தமது ஆழ்மன, தனிப்பட்ட இரகசியங்கள், தகவல்ககளை நம்பிக்கையுடன் பகிர்ந்து கொள்ளும் நிலமைக்குத் தள்ளப்படுகிறார்கள். இவ்வாறான பகிர்தலினூடாக அக்கறையும் அன்பும் அந்த உறவில் இருப்பதாக victims நம்பவைக்கப்படுகிறார்கள். 

இவ்வாறான மாயத்தோற்றத்துள் சிக்கியிருக்கும் victims பலசமயங்களில் தாமாகவும் அல்லது தம்மைச் சுற்றியிருப்பவர்களின் ஊடாகவும் அந்த உறவின் அசமத்துவத்தையும் உள ரீதியான அதிகார கட்டுப்பாட்டையும்  உணரத் தொடங்கும்போது  மனக்குழப்பத்தக்கு உள்ளாகுகிறார்கள். இருப்பினும், தாம் குற்றவாளியுடன் பகிர்ந்து கொண்ட பிரத்தியேக தகவல்கள் மற்றும் குற்றவாளி தங்கள் மேல் காட்டியது அக்கறை என நம்புவதினாலும் அந்த அடிப்படையான உறவை முறிக்க முடியாது மீண்டும் மீண்டும் ஒரு சுழற்சி முறையில் அதே உறவுக்குள் உழல வேண்டிய நிர்ப்பந்தத்துக்கும்  உள்ளாகிறார்கள்.  

இந்த உத்தியைப் பயன்படுத்தியே பெண்களோடு (victims) ஒரு விதமான உணர்வு பூர்வமான பிடியினை வைத்துக்கொள்கிறார்கள் (emotional grip). இந்த உணர்வு பூர்வமான பிடியே குற்றவாளிகளை (ஆண்களை) பாதுகாக்கும் மனநிலைக்கு பெண்களைத் தள்ளுகிறது. இந்த உணர்வுப் பிடியிலிருந்து மீண்டு வருவதற்கும், தனக்கு நடந்திருப்பது குற்றம் என உணர்வதற்கும் அவ்வுறவிலிருந்து வெளிவருவதற்கும் பாதிக்கப்பட்டவரைப் பொறுத்து கால அளவுகள்  வேறுபடுகிறது.     

பாதிக்கப்பட்டவரின் மீது (victims) குற்றவாளிகள் காட்டும் அன்பு/அக்கறை என்பது இனிப்பு மிட்டாய் கொடுத்து சிறுவர்களை தமது தேவைகளுக்குப் பயன்படுத்துவதற்கு ஈடானது. இதனைக் குற்றவாளிகள் வயதானவர்களோடு (adults) செய்யும் போது, அந்த இனிப்பின் வடிவம் பாதிக்கப்படும் ஒவ்வொருவரைப் பொறுத்து, அவரவர் குணாதிசயங்களின் அடிப்படையில் மாறிக் கொள்கிறது. சில சமயங்களில் பூ அல்லது பொம்மை, ஏனைய சந்தர்ப்பங்களில் பண உதவி என குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைவாக அவ்வடிவத்தினை மாற்றி மாற்றி வழங்குவார்கள். இதன் மூலமாகவே, பாதிக்கப்பட்டவர்களை (victims) தமது உளரீதியான பிடிக்குள் வைத்துக்கொண்டு, தமது குற்றப்பொறுப்புரிமைகளில் இருந்து குற்றவாளிகள் தப்பித்துக் கொள்கிறார்கள். 

ஹார்வி வீன்ஸ்ரைன் வழக்கிலும் குற்றம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும் அவர் குற்றமற்றவர் என நம்பிக்கொண்டிருக்கும் லின்ட்சே லோஹான் என்னும் பெண் (Lindsey Logan) இதற்கான சான்றாகும்.

சமூக உளவியல் அறிஞர்களின் கூற்றுப்படி, சாதாரண மனிதர்களால் இவ்வாறான நுண்ணிய, தேர்ச்சியான முறைமையில் தொடர்ச்சியாக பெண்களை ஒரே கோலத்தின் அடிப்படையில் மூளைச்சலவை செய்து தமது பாலியல் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியாது. அவ்வாறு செய்வதற்கு ஒரு வக்கிரமான, வன்முறையான அதிகார மேல் மனோநிலை அவசியமாகிறது. இந்த மனநிலை சமூகப் பொருளாதார சிறப்புரிமைகளினாலும் சமூக அங்கீகாரம் மற்றும் அதிகாரத் தகுநிலையாலும் உருவாக்கப்படுகின்றது. 

இவ்வாறு உருவாகிய அதிகாரங்களைக் கொண்ட ஆணுக்கு பச்சாதாபப் பற்றாக்குறையும் (empathy deficit) மற்றவருடைய நிலையிலிருந்து பிரச்சினைகளை அணுகும்/உணரும் மனநிலையும் இல்லாது போகிறது. குற்றவுணர்வின்மையாலும் சுயநல எண்ணங்களினாலும் உருவாகும் தன்மைய ஆளுமையும் (self-centric personality) உருவாகிறது. இவ்வாறான உளப்பிறழ்வு உடைய ஆண்களுக்கு இச்சமூகம், சமூக அங்கீகாரம், பிரபலம் (popularity) போன்ற சிறப்புரிமைகளை வாரி வழங்கும்போது, அவர்கள் தமது அதிகாரங்களைப் பயன்படுத்தி பாலியல் குற்றங்களையும் ஒடுக்கப்பட்டோர் மீதான வன்முறைகளையும் எதுவித பிரக்ஞையோ அல்லது அடிப்படை மனிதாபிமானமோ இன்றி செய்யக்கூடியவர்களாகிறார்கள். 

இக்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலில் இருந்து தப்புவதற்காக, மு. மயூரன் தனது வளர்ச்சியில் எரிச்சலுற்றே பிறர் இக்குற்றச்சாட்டுக்களை தன்மீது முன்வைக்கிறார்கள் எனப் பலரிடம் கூறி அனுதாபம் தேடித்திரிகிறார். ஹார்வி வீன்ஸ்ரைனும் இதே போன்ற பரப்புரைகளை தனது வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது கூறி, தனது குற்றங்களிலிருந்து தப்ப முனைந்தவரே. 

இப்பின்புலத்தில், பாலியல் வன்முறைகளும் குற்றங்களும் பாலியல் வன்தாக்குதல் (rape) என்னும் வரையறைக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்படக்கூடியது அல்ல என்பது தெளிவாகிறது. 

எல்லாவற்றையும் கேள்வி கேள் (question everything) – கார்ல் மார்க்ஸ் 

உசாத்துணைகள்: 

https://www.insider.com/what-is-grooming-sexual-abuse-2020-2

https://theconversation.com/the-boyfriend-model-of-abuse-is-not-restricted-to-grooming-gangs-82599

https://hbr.org/2017/10/sex-power-and-the-systems-that-enable-men-like-harvey-weinstein

முரளிதரன் மயூரனின் முறைகேடானான பாலியல் நடத்தை குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச (பு. ஜ. மா. லெ.) கட்சி வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து இந்த விசாரணையோடு தொடர்புபட்டிருக்கலாம் எனக் கருதப்படும் பெண்களின் மீது பன்முக சமூக வலைத்தள தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகின்றன. இப்பெண்களின் நடத்தை, தனிப்பட்ட வாழ்க்கை, உள்நோக்கம் என்பவை கேள்விக்குட்படுத்தப்படுகின்றன. கட்சிக்கு முறைப்பாடுகளை சமர்ப்பித்த, விசாரணையை முன்னெடுத்த, ஆதரவாக இருக்கின்ற பெண்களாகிய நாம் ஒன்றிணைந்து, இந்த விசாரணையோடு தொடர்பானவர்கள் எனக் கருதப்படும் பெண்களின் மீது நிகழ்த்தப்படுகின்ற சமூக வலைத்தள தாக்குதல்கள், வன்முறைகள் தொடர்பான எமது அவதானிப்புகளை பகிர்ந்து கொள்வதற்கு கடமைப்பட்டுள்ளோம்.

ஓர் ஆணுக்கு எதிரான பாலியல் சுரண்டல்/வன்தாக்குதல்/துர்நடத்தை தொடர்பான விசாரணை ஒன்றினை முன்னெடுக்கும்போது, அவரது நண்பர்கள், குடும்பத்தினர், அவரது ஏனைய சமூக வலையமைவுகளை சேர்ந்தோர் அவர் பின் அணிதிரண்டு ஆதரவளிப்பது வரலாற்றில் இது முதல் தடவை அல்ல. அறிந்தோ அறியாமலோ பெண்களும்  பாதிக்கபட்ட பெண்களைக் குற்றஞ்சாட்டுவதில் (victim-blaming) ஈடுபடுவதும், அதனூடே குற்றவாளியை பொறுப்புக்கூறலில் இருந்து பாதுகாக்க முனைவதும் இது முதல் தடவை அல்ல. ஆகவே, இது தொடர்பிலான சமூக உரையாடல்களுக்கான திறந்த, பாதுகாப்பான வெளிகளை உருவாக்கும் முகமாக நாம் அவதானித்த கீழ்வருனவற்றைப் பகிர்கிறோம்.

1. பெண்களை பெண்களுக்கெதிராக மோதவிடுவதினூடாக அதிகாரத்தை நிலைநிறுத்தும் உத்தி

பெண்கள் பெண்களுக்கு எதிராக முரண்படும் நிலைக்கு திட்டமிட்டுத் தள்ளப்பட்டுள்ளனர். கட்சி மு. மயூரனின் முறைகேடான பாலியல் நடத்தை காரணமாக அவரை தற்காலிகமாக கட்சியை விட்டு நிறுத்தும் அறிக்கையினை வெளியிட்டதைத் தொடர்ந்து பெண்களும் கூட்டுச் சேர்ந்து பெண்களைத் தாக்கும் சண்டைகளில் ஈடுபடுகின்றனர். நாம் வாழும் இந்த ஆணாதிக்கம் மிகு உலகில் கூட்டொருமைப்பாட்டுடன் பெண்கள் இணைவதை, செயற்படுவதை மு. மயூரன் போன்ற போலி இடதுசாரிகளும் ஏனைய பலமிக்க ஆணாதிக்க சக்திகளும் பிரித்து நிற்கின்றன. இந்தப் பிரிவினைகளால், முரண்பாடுகளால், சண்டைகளால் பயன்பெறுபவர்கள் தமது சுயநலன்களுக்காக பெண்களைச் சுரண்டும், வன்முறைக்கு உள்ளாக்கும் ஆண்களே அன்றி வேறு யாரும் அல்ல.

வரலாறு நெடிதும் அதிகாரத்தில் உள்ளவர்கள் ஒடுக்கப்பட்டவர்களை தமக்கிடையில் தொடர்ச்சியாக முரண்பட வைத்தும் மோத வைத்தும் தமது குற்றப் பொறுப்புரிமைகளிலிருந்து தப்பித்துள்ளனர். இது அவர்கள் தமது அதிகாரத்தைப் பேணுவதற்கும் பலப்படுத்துவற்கும் பயன்படுத்தும் வழமையான தந்திரமான ஓர் உத்தி ஆகும். இந்த உத்தி வர்க்க ரீதியான ஒடுக்குமுறைகளுக்கு மட்டுமன்றி அனைத்து வகையான ஒடுக்குமுறைகளுக்கும் பொருந்தும். 

2. பெண்கள் முறையிடுவதற்கான உரிமை மறுப்பு 

எம்மைச் சுற்றி சமூக வலைத்தளங்களில் நிகழும் உரையாடல்களை அவதானிக்கையில், பெண்கள் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டோம் என்று முறையிடும் உரிமையைக் கூட மறுப்பனவாகவே இவ் உரையாடல்கள் இருப்பதாக உணர்கிறோம். மேற்படி கேள்விகள் எழுப்பப்படும்போது, ஆண்கள் மேற்கொள்ளும் சுரண்டல், வன்முறை தொடர்பாக பேசும் உரிமையையும் இச்சமூகம் பெண்களுக்கு மறுத்து நிற்கிறது. 

அதிகாரம் கொண்டவர்களின் உத்திகளாக சூழ்ச்சித்திறனுடனான கையாளுகையும் (manipulation), அதன் தொடர்ச்சியான சுரண்டலும் இருந்து வந்திருக்கிறன. பெண்கள் தாம் சூழ்ச்சித்திறனுடன் கையாளப்பட்டோம், சுரண்டலுக்கும் வன்முறைக்கும் உள்ளாக்கப்பட்டோம் என்று சொல்வதற்கான குறைந்தபட்ச உரிமையையும் இச்சமூகம் வழங்காத நிலைமையே இங்கு காணப்படுகிறது. இதன் காரணமாகவே பெண்கள் வெளிப்படையாகப் பேசுவதற்கு முன்வருவதில்லை. மு. மயூரனின் முறைகேடான பாலியல் நடத்தை தொடர்பான இந்த விசாரணையோடு தொடர்புபட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்ற பெண்களின் மீது சமூக வலைத்தளங்களில் நிகழ்த்தப்படுகின்ற சமூக வன்முறையும் அவர்களது ஒழுக்க நடத்தை தொடர்பான கேள்விகளுமே பெண்கள் தாம் நாளாந்தம் எதிர்கொள்ளும் பாலியல் சுரண்டல்கள், வன்முறைகள் தொடர்பாக பேச முன்வராமைக்கான, முறைப்பாடு செய்யாமைக்கான முதன்மைக் காரணங்களாக விளங்குகின்றன. 

3. “பாலியல் வன்தாக்குதலுக்கு (rape) உள்ளாக்கினாரா”?

சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்படுகின்ற இன்னுமொரு சொல்லாடல்/கேள்வி “அவர் உங்களை பாலியல் வன்தாக்குதலுக்கு (rape) உள்ளாக்கினாரா” என்பது. ஆண்கள் பெண்களை ஒடுக்குவதற்கு பாலியல் வன்தாக்குதலை மட்டுமே ஒரு கருவியாகப் பயன்படுத்துவதில்லை. 

“பாலியல் ரீதியான வன்முறை” அல்லது “பாலியல் வன்தாக்குதல்” (rape) என்பதற்கான வரைவிலக்கணம் சமூக வரலாற்றிலும் சட்டவியலிலும் தொடர்ச்சியான மாற்றங்களுக்குள்ளாகி வந்துள்ளது. சட்டத்துக்குட்பட்ட மண உறவுகளுள், குடும்பங்களுக்குள் நடைபெறக்கூடிய பாலியல் வன்தாக்குதல் (marital rape) இன்றும் இலங்கை உட்பட பல நாடுகளில் குற்றவியல் (criminal) என்ற சட்டரீதியான வரையறைகளுக்குள் உள்வாங்கப்படவில்லை. சட்டரீதியான வரையறைகளுடன் பொருந்திப்போகிற பாலியல் குற்றங்களும் விசாரணை என்று வரும்போது ஆதாரங்கள் போதாததாலும், பாதிக்கப்பட்டவரையே (victim) குற்றம் சுமத்துவதாலும் (victim-blaming), மௌனிக்க வைப்பதாலும் (victim-silencing) மிக அரிதாகவே நீதியைப் பெற்றுத்தருகின்றன.

சட்டங்களும் சட்டவாக்க நிறுவனங்களும் பெரும்பாலும் ஆண்களால் கட்டியெழுப்பப்பட்டவை. தந்தைவழி மரபுச் சமூகத்தால் பராமரிக்கப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் வருபவை. இந்தப் பின்னணியில் சட்டத்தைத் துணைக்கழைப்பதும் வன்முறை நிகழ்ந்திருப்பின் சட்ட நடவடிக்கை எடுத்திருக்கலாம் தானே என்ற வாதங்களை முன்வைப்பதும் சமூக வரலாறு மற்றும் சட்டவியல் சார்ந்த அடிப்படை புரிதல் கூட அற்ற மனநிலையிலிருந்தே எழுகின்றன.  

4. உடனிணக்கத்துக்குரிய உறவுகள்

மு. மயூரனுடன் இசைவான உடனிணக்கத்துக்குரிய (consensual) உறவுகளில் இருந்த பெண்கள் தற்போது மு. மயூரன் தம்மை பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தியுள்ளார் என குற்றஞ்சாட்டுகின்றனர் என்னும் உருவகிப்பும் சொல்லாடல்களும் பரப்பப்பட்டு வருகின்றன. உடனிணக்கம் (consent) என்பது கற்களில் செதுக்கப்பட்ட ஒரு கருத்துரு அல்ல. அது இரு பாலியல் இணைகளுக்கு இடையில் உள்ள பாலியல் உறவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணத்திலும் தொடர்ச்சியாக உரையாடப்படும் பகிர்ந்து கொள்ளப்படும் ஒரு விடயம் ஆகும். 

உடனிணக்கம் என்பது இரு ஒத்திசைவுடனான வயது வந்தோருக்கிடையிலான பாலியல் உறவு என்று தவறாக நம்பப்படுகிறது. வயதுவந்தோர் என்பது 18 வயதுக்கு மேற்பட்டோர் என இலகுவாக வரையறுக்கப்படுகிறது. ஒரு சட்ட நீதிமன்றத்தில் குற்றங்களை அடையாளப்படுத்துவதற்கு இவ்வகையான பொருள் வரையறைகள் தேவை. ஏனெனில், ‘உள முதிர்வு’ போன்ற நுட்ப வேறுபாடுகளையும் அகம்சார் கூறுகளையும் சட்ட நீதிமன்றம் கருத்திலெடுக்க முடியாது. இருப்பினும், இடதுசாரிய அரசியல் வெளிகளில் ஈடுபடும் மு. மயூரனைப் போன்றவர்கள் அரசியல் வெளிகளில் அதிகாரத்திலுள்ள ஆண் ஒருவர் இந்த வெளிகளுக்குப் புதிதாகச் சேர்பவர்களுடன் அல்லது இவ்வெளிகள் தொடர்பாக அறியாதவர்களுடன் அல்லது இவ்வெளிகளின் விளிம்புகளில் அல்லது அவற்றுக்கு வெளியே உள்ளவர்களுடன் உறவில் ஈடுபடுவதன் அதிகார இயங்கியல், உறவுகளில் அசமத்துவம் போன்ற சொல்லாடல்கள் தொடர்பாக அறியாதவர்கள் அல்லர். 

வெளிப்படையான வன்தாக்குதல் அறிகுறிகள் இல்லாததன் காரணமாக அல்லது பொதுவெளியில் இருவர் சேர்ந்திருந்ததன் காரணமாக அல்லது சமூகத்தில் மகிழ்வான தோற்றப்பாட்டுடன் இருந்ததன் காரணமாக அவர்கள் உடனிணக்க உறவொன்றில் இருந்திருக்கலாம் என்னும் வாதத்தினை முன்வைப்பது ஓர் உறவுள் நிகழ்ந்த உளரீதியான திட்டமிட்ட தனிமைப்படுத்தல், உளவதை, பாலியல் சுரண்டல் தொடர்பாக அவர்கள் பேசுவதற்கான உரிமையை மறுப்பதாகும்.

5. பாலியல் சுரண்டலும் காலமும்

இவ்வளவு காலமும் இருந்து விட்டு இப்போது ஏன் பேசுகிறார்கள் என்னும் குற்றச்சாட்டுக்களும் பாதிக்கப்பட்ட பெண்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ளன. 

ஒருவர் தனது வாழ்வின் குறித்த ஒரு காலப்பகுதியில் சக மனிதர் ஒருவருடன் உறவில் இணைந்திருந்த காரணத்தால், அந்த உறவுக்குள் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் பின்னொரு காலத்தில் உரையாடுவதற்கான உரிமையை இழந்து விடுகிறார்களா? தனது உடல், உள, உணர்வு, ஆளுமை சார்ந்த இறைமையை முற்றுமுழுதாக கைவிட்டுவிட வேண்டுமா? 

வன்முறையில், சுரண்டலில் பாதிக்கப்பட்டவர்கள் அந்த அனுபவங்களை நினைவுகூரவும் வெளிப்படையாகப் பேச முன்வரவும் பல ஆண்டுகள் எடுக்குமென்பது  உலகின் வெவ்வேறு பாகங்களிலும் நிகழும் வன்முறையின் பல்வேறு வடிவங்களை கற்கும் ஆய்வாளர்கள் எப்போதோ எடுத்துக்கூறிய விடயம். குறிப்பாக குடும்ப வன்முறை பற்றிய சான்றுகளும் வெளிக்கூறல்களும் சிலவேளைகளில் குற்றஞ்சாட்டப்பட்ட குடும்ப உறுப்பினர் இறக்கும் வரை கூட வெளிவருவதில்லை. இதற்கு மூல காரணம் மிக இறுக்கமான சமூக மற்றும் குடும்பக் கட்டமைப்பும், பழமைவாத அற ஒழுக்கம் சார்ந்த கருத்தமைவுகளுமே ஆகும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து விடயங்களும் முரளிதரன் மயூரனின் முறைகேடான பாலியல் நடத்தை தொடர்பான பிரச்சினையுடன் மட்டும் தொடர்புடையன அல்ல. இது ஒரு சமூகப் பிரச்சினை. பாதிக்கப்பட்ட பெண்களைக் குற்றஞ்சாட்டுதல், பெண்களை பெண்களுக்கெதிராக மோதவிடுதல், பெண்களை நம்பாமை, ஆதாரங்களுக்கு மேல் ஆதாரங்கள் கேட்டல், சட்ட நீதிமன்றமொன்றில் நிற்கத் தகுந்த விடயம் மட்டும் தான் பாலியல் சுரண்டலாகும் என்ற வரையறைகளுக்குள் குறுக்குதல் போன்றன பாலியல் சுரண்டலை மேற்கொண்ட ஓர் ஆணை அடையாளப்படுத்தி, பெயர் குறிப்பிடும்போது சமூகத்தால் முன்வைக்கப்படும் பொதுவான நியாயங்களாக விளங்குகின்றன. 

பாலியல் சுரண்டல், வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் பேச முன்வராமை மற்றும் பேச முன்வரும் பெண்களின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டும் சமூக வன்முறை தொடர்பிலான உரையாடல்களுக்கு இவ்வெளி பங்களிக்கும் என்னும் நம்பிக்கையுடன் இக்கேள்விகள், சொல்லாடல்களை நாம் இங்கு பதிவு செய்கிறோம். 


Since the release of the statement by the NDMLP on the alleged misconduct on women by Muralitharan Mauran, the women who were suspected to have been involved in the process have been subjected to social media trials. The conduct, private lives, motives of these women has been called into question. Further these questions have been raised strongly by women who are feminists. Hence we the women who have complained, supported and initiated the inquiry are writing our following observations on what women who are suspected to be part of the process have been subjected to by others including feminists.

This is not the first time in history, when a sexual abuse/ harassment/ misconduct inquiry is initiated against a man, his friends, family, and other social networks rally around him in support. This is not the first time, women have knowingly or unknowingly engaged in victim blaming and enabled the abuser to be saved from accountability. Therefore we want to engage in conversations which have ensued in the past keeping in mind that it is our ‘personal’ which is our ‘political’.

1. Women pitted against women 

After NDMLP released its interim statement on the interim action it has taken on the complaints received from women against M. Mauran on his alleged misconduct on women debates have burst out on social media on the ‘innocence’ or ‘guilt’ of the relevant individual. The large part of this debate has been taken forward on both sides by women. Women fighting women over the conduct of a man on women is not unusual and is often the norm in our society. This is only the reflection of an extremely patriarchal world we live in where solidarity amongst women is made impossible by patriarchal forces which tear us apart. The only people who stand to benefit from this are men who exploit, harass and abuse women for their personal gratification. They continue to escape liability by using this age old tool of making the oppressed fight amongst each other and keep power to themselves. This is true in all forms of oppression including class oppression

2. Denial of the right to complaint 

The social media debates surrounding M. Mauran’s inquiry has often raised questions on the character of women who have complained, the nature of the relationship which these women had with M. Mauran, motives behind the allegations leveled against the said person. In effect, a clear message is sent to all women present and future on speaking out against sexual exploitation – “Do not complain. You do not have the right to complain. And if you do there will be damaging consequences to you and those who support you”.

The right to speak out about personal experiences of exploitation, manipulation and social isolation faced in the hands of the abuser is denied to women by society. Silencing of victims through public shaming is a key reason why women chose not to speak out about gender based violence and sexual exploitation.

3. ‘Did he rape?’

Another question which has been raised is ‘Did he rape?’  Rape is not the only means of violence men resort to oppress women. Women are oppressed and exploited in multiple ways including mental manipulation, gas lighting etc.  However despite the lack of apparent violence in these allegations, the violence which has erupted on the women who were suspected to have been behind this inquiry on M. Mauran is a reflection of the day to day violence maintained on women and the violent means through which women are even prevented of talking about their oppressed condition    

When the question ‘Did he rape?’ is raised the issue of sexual violence is reduced to crimes recognised in statute books. The definition of ‘rape’ and ‘sexual violence’ has evolved over time and continue to evolve even within legal spaces. However the left has often problematized the ‘legal approach’ to social justice issues including sexual violence and oppression maintained on women.  

For instance certain acts of sexual violence such as marital rape are not even considered a crime in many countries including Sri Lanka. Secondly when incidents of sexual violence and oppression is reduced to what is recognised as a crime in a court of law, the problems faced by women of ‘proving’ the crime such as lack of evidence becomes a tool to protect the abuser even within spaces outside the Court houses. 

Discussions on the gendered nature of law, and why women struggle to prove cases of sexual violence in a Court of law is not new to left spaces. In fact asking for more evidence when credible stories of exploitation are placed before institutions and public platforms is itself a reflection of society’s perception of women’s trustworthiness, even when common knowledge exist that sexual abuse and exploitation is the norm for all women. 

4. Consent 

Women have been portrayed as having ‘consensual relationships’ with Mauran and later complaining that they were abused. ‘Consent’ is not something which is written on paper. It is something which two consenting adults must work on every minute of a sexual relationship. Further ‘adulthood’ is also defined very easily as those above the age of 18. Such definitions of adulthood are needed to identify ‘crimes’ in a Court of law, because the law cannot factor in nuances and subjective factors such as ‘emotional maturity’.

However people who engage in left politics are no strangers to discourses on power dynamics and inequality in relationships. When a man perceived to be powerful in political circles engages in sexual relationships with persons who are new to these spaces, unknown to these spaces or remain in the peripheries or outside these spaces the unequal nature of power between the man and the other has a bearing on ‘consent’ in the said relationship. 

To make an argument that a relationship is consensual because there is no visible signs of abuse, or that two people ‘went out’ in the eyes of the public, or appeared ‘happy’ to society is denying the right of the exploited in the relationship to speak about the psychological manipulation, the isolation and emotional abuse which a person may have experienced in what appeared to be a ‘consensual relationship’. 

5. ‘Why are they complaining after all this while?’  

“Why complain after so many years?”  “Why did they remain silent then?” are some of the questions which have been raised in social media about the women who have made the complaints to the party.

These questions raise counter questions on the side of affected women such as,

If a person engages in what appears to be a consensual relationship to the public, does she lose the right to speak about the abuse and exploitation she has undergone?

Does society deem her as a person who had lost her autonomy over body, mind, thought and self to feel and to speak about her experiences after many years of being in a ‘consensual relationship’?

Does society prescribe the time frame for when a woman can and cannot speak out about her experiences of facing sexual abuse and exploitation?

Persons who undergo abuse take time to speak. Further it has been recorded that persons who have undergone domestic violence do not speak of it until the abuser is dead. There are many reasons for this such as the time needed to process trauma, fear and shame. Oftentimes the abuser engages in techniques of emotional manipulation such as gaslighting which prevents the abused or exploited from seeking help or even leaving the relationship. Given the existing literature on why the exploited do not speak up immediately, raising questions on time within the left circles is a means of attributing motive and discrediting women who are speaking of their experiences. 

The above five issues dealt with are no means unique to the sexual misconduct inquiry which is ongoing against M. Mauran by NDMLP and the public perception of this inquiry. Victim blaming, pitting women against women, disbelieving women, asking for evidence and more evidence and  attempting to reduce the issue of sexual exploitation to what would stand in a court of law are all common symptoms exhibited by society when a man is identified and named as a sexual exploiter. However, we are recording these questions and discourses with the hope that it would enlighten and enrich the ongoing discourses on why victims of abuse and exploitation do not speak out and the different means of violence maintained on women including violence maintained by society to suppress the voices of women who dare speak up. 

Create your website with WordPress.com
Get started